/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை டயாலிசிஸ் மையம் ஜூனில் திறக்க பணிகள் வேகம்
/
வடசென்னை டயாலிசிஸ் மையம் ஜூனில் திறக்க பணிகள் வேகம்
வடசென்னை டயாலிசிஸ் மையம் ஜூனில் திறக்க பணிகள் வேகம்
வடசென்னை டயாலிசிஸ் மையம் ஜூனில் திறக்க பணிகள் வேகம்
ADDED : பிப் 13, 2025 12:14 AM

காசிமேடு, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காசிமேடு, புதுமனைகுப்பம், சிங்காரவேலன் நகரில், புதிய குடியிருப்புகள் அமைப்பது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.டி.சேகர், எபினேசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும், டயாலிசிஸ் சென்டர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், புதிய சமூகநலக் கூடம் மற்றும் விளையாட்டு திடல் பணிகளை சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின்னர் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
காசிமேடு, புதுமனைகுப்பம், சிங்காரவேலன் நகரில் 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
குறைந்த மழை பெய்தாலும், தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது என தெரிவித்தனர். அந்த பகுதியில், வாய்ப்பு இருந்தால் கூடுதலாக புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 252 பணிகளுக்கு, 6,039 கோடி ரூபாய் செலவில், நவம்பரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக, 700 குடியிருப்புகளின் கட்டுமானப்பணி 100 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.
ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வடசென்னை டயாலிசிஸ் மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

