தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருங்குடியில் பழைய கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்

 பெருங்குடியில் பழைய கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்

 பெருங்குடியில் பழைய கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்


ADDED : மார் 05, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி: பெருங்குடி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள, 5.50 லட்சம் டன் பழைய கழிவுகளை, 53.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பயோ மைனிங்' முறையில் அகற்றும் பணியை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று துவக்கி வைத்தார்.

அதன்பின், அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெருங்குடி குப்பை கிடங்கில், 40 ஆண்டுகளாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன.

இக்கிடங்கின், 225 ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பு, ஆறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, 'துாய்மை இந்தியா' திட்ட நிதியின் கீழ், 350.065 கோடி ரூபாயில், 29.28 லட்சம் கன மீட்டர் பழைய கழிவுகளை, 'பயோ மைனிங்' முறையில் அகற்றி, நிலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை, 3 முதல் 5 தொகுப்புகளில், பணிகள் முழுமையாக முடிந்து, 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளது. 6வது தொகுப்பு பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.

ஒன்று மற்றும் 2வது தொகுப்புகளில், 'துாய்மை இந்தியா - 1.0' திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்திருந்தாலும், விடுபட்டுள்ள 5.50 லட்சம் டன் பழைய கழிவுகளை அகற்ற, 'துாய்மை இந்தியா - 2.0' திட்டத்தின் கீழ், 53.60 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

ஒப்பந்த விதிப்படி, குறைந்த விலைப்புள்ளி கோரிய நிறுவனத்திற்கு, 51.26 கோடி ரூபாய் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டு, இப்பணி துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us