/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாராயணபுரம் ஏரியை சீரமைத்து மேம்படுத்தும் பணி துவக்கம்
/
நாராயணபுரம் ஏரியை சீரமைத்து மேம்படுத்தும் பணி துவக்கம்
நாராயணபுரம் ஏரியை சீரமைத்து மேம்படுத்தும் பணி துவக்கம்
நாராயணபுரம் ஏரியை சீரமைத்து மேம்படுத்தும் பணி துவக்கம்
ADDED : மார் 17, 2026 05:34 AM

பள்ளிக்கரணை: பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்டது பள்ளிக்கரணை. இங்குள்ள நாராயணபுரம் ஏரி, சதுப்பு நிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஏரியில், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை ஏரிகளின் நீர் கலந்து, இதன் கொள்ளளவு நிரம்பியவுடன், உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும்.
முக்கியமான இந்த ஏரியை பாதுகாக்கும் பொருட்டு, இதை சுற்று லாத்தலமாக மேம்படுத்தும் பணியை, சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.
அதன்படி, ரேடியல் சாலையின் தெற்கு பகுதியில் உள்ள, 2.5 கி.மீ., சுற்றளவுள்ள நாராயணபுரம் ஏரியின், 750 மீட்டர் நீளமுள்ள கரையில், நடைபாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி மூலதன நிதி, 1.5 கோடி ரூபாயில் துவங்கப்பட்டுள்ள இப்பணியில், 5 மீட்டர் அகலத்திற்கு கரையை பலப்படுத்தி, நடைபாதை, இருக்கைகள், மூன்றடி உயர தடுப்பு சுவர் அமைத்து, மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணி முடிந்ததும், இதை பராமரிக்கும் பொறுப்பு, தமிழக சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்படும். பின், படிப்படியாக படகு சவாரி, பூங்கா, உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

