தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பயணியின் 20 சவரன் மீட்பு திருடிய தொழிலாளி கைது

 பயணியின் 20 சவரன் மீட்பு திருடிய தொழிலாளி கைது

 பயணியின் 20 சவரன் மீட்பு திருடிய தொழிலாளி கைது


ADDED : மே 24, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதவரம்: மாதவரத்தில் உள்ள ஆந்திரா பேருந்து நிலையத்தில், பயணி தவறவிட்ட நகைகளை திருடிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

கொடுங்கையூர் சின்னான்டிமடத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 45; தனியார் நிறுவன ஊழியர். அவருடைய மனைவி லோஸ்னா, 38.

இவர்கள் கடந்த 20ம் தேதி ஆந்திரா செல்ல, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது, லோஸ்னாவின் ஹேன்ட்பேக், 'ஜிப்' மூடப்படாததால், உள்ளே இருந்த தங்க நகைகள் உள்ள சிறிய பை கீழே விழுந்துள்ளது.

இதை அறியாமல், அவர்கள் பேருந்தில் ஏறி ஆந்திரா புறப்பட்டனர். வழியில் கைப்பையை சோதனை செய்தபோது, நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் பேருந்து நிலையம் வந்த அவர்கள், நகை தொலைந்து போனது குறித்து, மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரித்த போது, கூலித் தொழிலாளி ஒருவர், நகை பையை திருடி சென்றது தெரியவந்தது.

இரண்டு நாட்களாக தேடி, லாரியில் லோடுமேனாக வேலை செய்யும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ், 56 என்பரை, போலீசார் கைது செய்தனர். மாதவரம் ரவுண்டானா அருகே அவர், குழிதோண்டி புதைத்து வைத்திருந்த, 20 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ராஜேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us