ADDED : ஜூன் 27, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்லப்பாக்கம், ஜூன் 27-
வேலுார், திருப்பத்துாரைச் சேர்ந்தவர் காளியப்பன், 22. சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், ராஜிவ்காந்தி தெருவில் தங்கி, பழைய வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று, முதல்மாடி 'சன்ஷைட் சிலாப்' மீது பெரிய நாற்காலி வைத்து, அதன்மீது நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, இரண்டாம் தள 'சன்ஷைட் சிலாப்' பிடிமானம் இல்லாமல் சரிந்து, காளிப்பன் மீது விழுந்தது. இதில், தலை சிதைந்து, காளியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சிட்லப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.