ADDED : டிச 06, 2024 12:24 AM
அ நிறம் | அளவு
மணலி புதுநகர்,
விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில், பாலாஜி இன்ஜினியரிங் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, பீஹாரைச் சேர்ந்த ரோஷன் குமார், 22, என்பவர், பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கிரேன் கொக்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி உரசியதில், 240 கிலோ அளவிலான 2 இரும்பு ராடுகள் விழுந்ததில், ரோஷன் பலத்த காயமடைந்தார்.
சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார்.
மணலி புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
