/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரேனில் இருந்து இரும்பு கம்பி சரிந்து விழுந்து தொழிலாளர் பலி
/
கிரேனில் இருந்து இரும்பு கம்பி சரிந்து விழுந்து தொழிலாளர் பலி
கிரேனில் இருந்து இரும்பு கம்பி சரிந்து விழுந்து தொழிலாளர் பலி
கிரேனில் இருந்து இரும்பு கம்பி சரிந்து விழுந்து தொழிலாளர் பலி
ADDED : டிச 16, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: கட்டுமான பணித்தளத்தில் இரும்பு கம்பி சரிந்து விழுந்ததில், தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சோலிமன், 20; கூலித்தொழிலாளி. இவர், குன்றத்துார், கொல்லச்சேரி பகுதியில் தங்கி, பிரபல கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் பணியின்போது, 'கிரேன்' வாகனம் மூலம் கட்டுமான கம்பிகளை துாக்கி சென்றபோது, அவை சரிந்து சோலிமன் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.