ADDED : மார் 19, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சிட்லப்பாக்கம்: சுவர் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனத்தை அடுத்த மேல்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54. குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.
அஸ்தினாபுரம், கிருஷ்ணா நகரில், நேற்று, பழைய கட்டடத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 20 அடி உயர சுவரை இடிக்கும்போது, சுவர் சரிந்து ஆறுமுகத்தின் மீது விழுந்தது.
இதில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
