தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி  

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி  

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி  


ADDED : அக் 23, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிக்கரணை, அக். 23--

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீர்முகமது, 28; கூலித்தொழிலாளி. இவர், மேடவாக்கம், சிவகாமி நகரில் தங்கி, புது வீட்டிற்கான கட்டட வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம், 30 அடி நீள கம்பியை, தரை பகுதியிலிருந்து, வீட்டின் மாடிக்கு சீர்முகமது துாக்கிச் சென்றார். அப்போது, மின் கம்பியில், அவர் எடுத்து வந்த கம்பி உரசியது. இதில் சீர்முகமது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

சகதொழிலாளர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவல் அறிந்த மேடவாக்கம் போலீசார், சீர்முகமதுவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us