ADDED : செப் 06, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம் :மாதவரத்தில் 'வாட்டர் வா ஷ்' கடையில் பணிபுரிந் த தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பலியானார்.
மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம், காமராஜர் சாலை பகுதியில் வெங்கடேசன் என்பவர் 'ஸ்ரீ சக்தி வாட்டர் வாஷ்' கடை நடத்தி வருகிறார்.
இங்கு, நேபாளத்தைச் சேர்ந்த பஞ்சும்ராஜ் புடாமகர், 39, என்பவர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை 5:00 மணியளவில், தன் 2வது மகன் நாராயணன் உடன் சேர்ந்து, மின் மோட்டார் மூலம் இயங்கும் குடிநீர் குழாயை வைத்து, தரையை சுத்தம் செய்தார்.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர் பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரிய வந்தது.