ADDED : அக் 12, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகாபுத்துார்:அனகாபுத்துார், கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 40. அதே பகுதியில் நடக்கும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம், கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு எதிரே, சாலையோரத்தில் அமரச் சென்றார்.
அங்கு, குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரியாக மூடப்படாமல் இருந்தது. அதன் வழியாக செல்லும் மின் வடத்தில் இருந்து, சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உயிரிழந்தார்.சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.