UPDATED : மே 01, 2026 09:48 PM
ADDED : மே 01, 2026 09:30 PM
அ நிறம் | அளவு
மணலிபுதுநகர்: செங்கல் சூளையில் மின்சாரம் பாய்ந்து, தொழிலாளி பலியானார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ராஜ், 45. மனைவி, நான்கு பிள்ளைகளுடன், மணலி புதுநகர் அடுத்த வெள்ளிவாயல் சாவடி பகுதியில், 'சீனிவாசா பிரிக்ஸ் ஒர்க்' என்ற செங்கல் சூளையில் ராஜ் தங்கி, 15 ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை, சூளையில் உள்ள மண் மீது தண்ணீர் அடிப்பதற்காக, ராஜ், மோட்டர் ஸ்விட்ச் போட்டுள்ளார். அப்போது, சேதமாகியிருந்த மின்வயர் மீது கால் வைத்ததில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதித்த டாக்டர், ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணலிபுதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
