ADDED : நவ 28, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45; கட்டுமான கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை 6:30 மணிக்கு, கண்டிகையிலிருந்து பொன்மார் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பார்த்திபன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

