/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்காவில் ஊழியர்கள் போராட்டம்
/
வண்டலுார் பூங்காவில் ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 29, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பூங்காவில், 1985ல் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் கொடி மற்றும் பெயர் பலகை 15 ஆண்டுகளுக்கு முன், பூங்கா வளாகத்தில், பார்வையாளர்கள் வெளியே செல்லும் பாதையை ஒட்டி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், கொடி மற்றும் பெயர் பலகையை எந்த அறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டது.இதை கண்டித்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

