/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிகள் நடக்குது; வேகமில்லை! பீதியில் பெருங்குடி மக்கள்
/
பணிகள் நடக்குது; வேகமில்லை! பீதியில் பெருங்குடி மக்கள்
பணிகள் நடக்குது; வேகமில்லை! பீதியில் பெருங்குடி மக்கள்
பணிகள் நடக்குது; வேகமில்லை! பீதியில் பெருங்குடி மக்கள்
ADDED : அக் 14, 2024 06:32 AM

-பெருங்குடி : சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் 11 வார்டுகள் உள்ளன. 34.74 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
வடகிழக்கு பருவ மழையின் போது, தென்சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் பெருங்குடி மண்டலம் ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்குவது, படகுகளில் மீட்பது, போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிப்பு வாடிக்கையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்தாண்டு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், மேலும் பணிகளை மழைக்கு முன் முடிக்க வேண்டியுள்ளது. பணிகள் முடியாததால், இப்பகுதியினர் மழைக்கால பீதியில் உள்ளனர்.
பெருங்குடி மண்டல செயற் பொறியாளர் முரளி கூறியதாவது:
நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி ஆகிய நீர்நிலைகளில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் உபரிநீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கும் மழைநீரை உள்வாங்கி, பக்கிம்ஹாம் கால்வாய் வழியாக, வங்க கடலில் சென்னை சேரும் வகையில், பள்ளிக்கரணை வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலப் பகுதியும் இம்மண்டலத்தில் அமைந்துள்ளது.
நாராயணபுரம் ஏரியில் மழைநீர் விரைவாக வடிய, 40 கோடி ரூபாயில், 'கட் அண்டு கவர்' கால்வாய் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில், நான்கு சிறுபாலங்கள், நான்கு பாலங்களில் மண் கழிவுகள் அகற்றும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- - வேளச்சேரி பிரதான சாலை இருபுறமும் உள்ள ஐந்து குறுக்கு கால்வாய்களில் மண், கழிவு அகற்றப்பட்டுள்ளது.
வீராங்கால் ஓடையின் உபரிநீர், குடியிருப்புகளில் புகாமல் இருக்க நான்கு இடங்களில் தடுப்பு கதவு அமைக்கப்பட்டுள்ளது.
கொட்டி வாக்கம் பேவாட்ச் பகுதி தாழ்வாக உள்ளது. பல இடங்களில் இருந்து மழைநீர் சேகரமாகி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு தீர்வாக 180 மீட்டர் நீளத்திற்கு, 3 அடி விட்டத்தில் சிமென்ட் குழாய் அமைக்கபட்டுள்ளது. அதேபோல, வி.ஜி.பி., லே- அவுட்டிலும், 300 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் உள்ள, 17 சிறு பாலங்களில் மண் கழிவு அகற்றும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பெருங்குடி ரயில் நிலையம் அருகே, ஆறு கால்வாய் துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
பள்ளிக்கரணை,நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட கரை பகுதியை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
பள்ளிக்கரணை, பெரிய ஏரி, ஜல்லடியன்பேட்டை ஏரிகள் துார்வாரி, ஆகாய தாமரை செடிகள் சுத்தப்படுத்தும் பணி துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு கூறினார்.