UPDATED : ஜூன் 06, 2026 06:10 PM
ADDED : ஜூன் 06, 2026 05:41 PM
சென்னை;தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ஓ.என்.ஜி.சி., எனும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் மற்றும் எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நேற்று காலை சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடந்தது.
இதில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம், ஓ.என்.ஜி.சி., சிவகுமார் மற்றும் எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளையின் பிரதிநிதிகள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், வளாகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
***
