ADDED : ஜூலை 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் எப்ரன். இவரது மனைவி வனிதா, 34.
இவர், நேற்று மாலை பள்ளியில் இருந்து இரு மகள்களை அழைத்து கொண்டு, 'மெக்டொனால்டு' கடைக்கு சென்று பர்கர் வாங்கி கொடுத்துள்ளார். அதில், புழு நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, ஆவடி போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில், பர்கரில் புழு இருந்ததை, கடையின் பொறுப்பாளரான கார்த்திக் ஒப்புக்கொண்டார்.
உணவு பாதுகாப்பு துறையினர் கூறுகையில் 'சமையலறையில் இருந்த பொருட்களை, ஆய்வு கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்ய இருக்கிறோம்' என்றனர்.