ADDED : மே 29, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகரில் மக்களை அச்சுறுத்தும் வகையில், மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சூசைராஜ், 18 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், நான்கு கத்திகளை பறிமுதல் செய்தனர்.