/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடிதம் எழுதினால் ரூ.50,000 பரிசு!
/
கடிதம் எழுதினால் ரூ.50,000 பரிசு!
ADDED : ஜன 16, 2025 11:59 PM
சென்னை,தேசிய அளவில் அஞ்சல் துறை சார்பில் இந்தாண்டு, 'எழுதுதலில் மகிழ்ச்சி- - டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' எனும் தலைப்பில், கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். இந்த கடிதம், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில், இன்லேண்ட் கடிதத்தில், 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், 'ஏ4' தாளில், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.
அக்கடிதத்தில், 18 வயதிற்கு கீழ், மேல் உள்ளோர் சுயச்சான்று அளிக்க வேண்டும். தேசிய அளவில் முதல் பரிசு, 50,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 25,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 10,000 ரூபாய் வழங்கப்படும். மாநில அளவிலான முதல் பரிசு, 25,000 ரூபாய்; இரண்டாம் பரிசு 10,000 ரூபாய்; மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
கடிதத்தை, 'தலைமை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை- - 600 0023 என்ற முகவரிக்கு வரும், 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.