ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் அப்துல் ஆசிப், சோபிகா முதலிடம்
ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் அப்துல் ஆசிப், சோபிகா முதலிடம்
ADDED : மார் 04, 2026 06:04 AM
சென்னை: சென்னை மாவட்ட கேரம் சங்கம் ஆதரவில், ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான கேரம் போட்டி, பிராட்வேயில் உள்ள மையத்தில் நிறைவடைந்தது.
சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 465 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர். சப் - ஜூனியர் சிறுமியர் இறுதிப் போட்டியில், ஆக்னஸ், 9 - 14, 17 - 11, 15 - 12 என்ற புள்ளிக்கணக்கில் சஹானாவை வீழ்த்தி முதலிடத்தை கைப்பற்றினார்.
சிறுவரில், குருநாதன், 17 - 5, 21 - 06 என்ற புள்ளிக்கணக்கில் லக் ஷனை தோற்கடித்தார். பதக்கம் அல்லாத பிரிவில், ஹரிபாலாஜி, 6 - 21, 21 - 14, 25 - 12 என்ற புள்ளிக்கணக்கில் வினோத்தை வீழ்த்தினார்.
பெண்களில், சோபிகா 24 - 8, 25 - 12, 25 - 5 என்ற புள்ளிக்கணக்கில் பரகத் நிஷாவையும், ஆண்களில் அப்துல் ஆசிப், 25 - 12, 18 - 16 என்ற புள்ளிக்கணக்கில், ரமேஷ்பாபுவையும் வீழ்த்தி முதலிடங்ளை வென்றனர்.
