தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ யோகா வகுப்புகள் கே.கே.நகரில் துவக்கம்

 யோகா வகுப்புகள் கே.கே.நகரில் துவக்கம்

 யோகா வகுப்புகள் கே.கே.நகரில் துவக்கம்


ADDED : மார் 18, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சத்யானந்த யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வரும் 22ம் தேதி, மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவில் அடுத்த வெங்கிலி அம்மன் கோவிலிலும், வேளச்சேரி, கிராண்ட் மால் எதிரில், முருகன் நகர், 5வது தெரு, எண், 175லும் துவங்குகிறது.

மேலும் நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹாலிலும், கே.கே., நகரில், அய்யப்பன் மற்றும் கோ சாலா கிருஷ்ணன் கோவில், சாஸ்தா சங்கத்திலும் துவங்கி, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன.

பீஹார் யோகா பள்ளியால், ஆசனம், பிரணாயாமம்,பிரத்தியாகாரம், தாரணா மந்திரம், உடல் உள்ளுறுப்புகள் பாதுகாத்தல் எனும் ஷத்கிரியைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 94450 51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us