/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
குழந்தை நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 17, 2024 12:26 AM
சென்னை, குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளைஞர் நீதி குழந்தைகள் நலக் குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப் பணிகளில், குறைந்தது ஏழு ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், 35 வயதிற்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து விண்ணப்பம் பெற்று, 15 நாட்களுக்குள், 'இயக்குனர், சமூக பாதுகாப்பு, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இது அரசு பணி இல்லை; தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.