/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர மரங்களை வெட்ட இனி மாநகராட்சியிலேயே விண்ணப்பிக்கலாம்!
/
சாலையோர மரங்களை வெட்ட இனி மாநகராட்சியிலேயே விண்ணப்பிக்கலாம்!
சாலையோர மரங்களை வெட்ட இனி மாநகராட்சியிலேயே விண்ணப்பிக்கலாம்!
சாலையோர மரங்களை வெட்ட இனி மாநகராட்சியிலேயே விண்ணப்பிக்கலாம்!
ADDED : ஜன 11, 2026 05:03 AM

சென்னை: சாலையோர மரங்களை வெட்ட நாளை முதல், சென்னை மாநகராட்சி இணைய தளம், 'நம்ம சென்னை செயலி' வாயிலாகவும் விண்ணபிக்கலாம். அனுமதியின்றி மரம் வெட்டினால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
மரங்களை அகற்றுதல், மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு, வனத்துறை வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையை மாற்றி, அனைத்து விண்ணப்பதாரர்களும், மாநகராட்சியின், https://chennai corporation.gov.in/gcc என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை, நாளை அமலுக்கு வருகிறது.
மேலும், 'நம்ம சென்னை செயலி' வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் விண் ணப்பதாரர்கள், இச்சேவையை பெற, மாநகராட்சி இணையதளத்தில், 'பசுமைக்குழு' போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சியின் பூங்கா கண்காணிப்பாளர், மேற்பா ர்வையாளர், சமூக ஆர்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, மாவட்ட பசுமை குழுவிற்கு அனுப்புவர்.
பசுமை குழுவின் நடவடிக்கை விபரங்கள், குறுஞ்செய்தியா க விண்ணப்ப தாரர்களுக்கு அனுப்பப்படும்; மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
அபராதம் உரிய அனுமதியின்றி, பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மரக்கிளைகள் வெட்டுதல் , மரத்தில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் பொருத்துதல், மரக்கிளை சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, மாநகராட்சி பகுதிகளில் மரம் அகற்றுதல், மரக்கிளைகள் அகற்றுதலுக்கு, உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

