/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மட்டுமே மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மட்டுமே மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மட்டுமே மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மட்டுமே மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 08, 2025 12:52 AM
சென்னை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மட்டுமே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் 15ம் தேதி துவங்கப்படுகிறது. இதற்காக, சென்னையில் 25, 38, 76, 109, 143, 168 ஆகிய ஆறு வார்டுகளில், முதற்கட்டமாக இத்திட்ட முகாம் நடக்கவுள்ளது.
இதை தொடர்ந்து, 1, 20, 79, 94, 167, 179 ஆகிய ஆறு வார்டுகளில் 16ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக, இன்று முதல் விண்ணப்ப படிவம் வீடு வீடாக வழங்கப்படும்.
இதில், நகராட்சி நிர்வாகம், வருவாய், மருத்துவம், கூட்டுறவு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், வீட்டு வசதி உள்ளிட்ட 13 துறைகளின் 43 சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருப்பின், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் நாளில் நேரடியாக சென்று, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பங்கள், 45 நாட்களில் தீர்வு காணப்படும். தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும் முகாம்களில், மக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.