ADDED : மார் 29, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை அமிர்தா பல்கலை பேராசிரியர் வெங்கடசுப்பிரமணியன் பேசியதாவது:
எதிர்காலம் இதுதானா என்று கேட்கும் அளவில், வேளாண்மை, பொறியியல், மருத்துவம், ஆட்டோமொபைல், விண்வெளி உள்ளிட்ட துறைகளில், ஏ.ஐ., தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.
பொறியியல், மருத்துவத்தோடு, ஏ.ஐ., தொழில்நுட்பம் சேர்ந்து படிப்பது சிறந்தது. பொறியியலும், தொழில்நுட்பமும் ஒவ்வொன்றும் இணைந்தே பயணிக்கும்.
இந்ததொழில்நுட்பம், பணிகளை விரைவாகவும், துல்லியமாக செய்ய முடியும். இந்த துறையை சார்ந்த நவீன தயாரிப்புகளும், வசதிகளும் சந்தைக்கு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.