ADDED : ஏப் 22, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
கண்ணகி நகர்:சேர்ந்து வாழ்ந்தவர், வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனமுடைந்த பெண், தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணகி நகரை சேர்ந்த சினேகா, 23, என்பவர், வல்லரசு என்ற நபரை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். சினேகா ஏற்கனவே தனுஷ் என்ற வாலிபரை காதலித்ததை தெரிந்த வல்லரசு, சில மாதங்களில் சினேகாவை விட்டு பிரிந்தார்.
பின், தனுசுடன் சினேகா சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சில நாட்களாக, தனுஷ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில், ஏப்ரல் 21 அன்று இரவு, சினேகா பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
