தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காரில் நெருப்பு கக்க வைத்து அச்சப்படுத்திய வாலிபர் கைது

காரில் நெருப்பு கக்க வைத்து அச்சப்படுத்திய வாலிபர் கைது

காரில் நெருப்பு கக்க வைத்து அச்சப்படுத்திய வாலிபர் கைது


ADDED : செப் 14, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலாங்கரை, செப் 15-–

காரில் நெருப்பு கக்க வைத்து பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்திய, 24 வயது வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி கடந்த, 12ம் தேதி இரவு ஒரு ஷிப்ட் கார் அதிவேகமாக சென்றது. பாலவாக்கம் அருகில் சென்றபோது, காரில் சட்ட விரோதமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு சைலன்சரில் இருந்து நெருப்பு கக்க வைத்த ஓட்டுநர், பின்னால் வந்த வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். இதை, சில வாகன ஓட்டிகள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், சிட்லப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், 24, என்பதும், சினிமா சண்டை காட்சிகளுக்கு, வாகன வடிவமைப்பு தொழில் செய்து வருவதும் தெரிந்தது. சினிமா சண்டை காட்சிக்கு முன்னோட்டம் பார்க்க, இ.சி.ஆரில் கார் ஓட்டி நெருப்பு கக்க வைத்துள்ளார்.

நேற்று இவரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.

––––––––––––––––––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us