ADDED : மார் 18, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல்,பம்மல், பசும்பொன் நகர், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ், 50; சமையல்காரர். அதே பகுதியைச் சேர்ந்தவர் டென் என்கிற பிரவீன், 23; உணவு டெலிவரி ஊழியர்.
உறவினர்கள் இருவரும், மார்ச் 13ம் தேதி, பசும்பொன் நகர் மைதானத்தில், மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், பிரவீன் தள்ளவிட்டதில், இருதயராஜுக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதயராஜ், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், பிரவீனை நேற்று கைது செய்தனர்.