ADDED : ஏப் 29, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
கண்ணகி நகர்:: கல் வீசியது குறித்து தட்டிக்கேட்ட தம்பதியை தாக்கிய வாலிபரை: கண்ணகி நகரை சேர்ந்த சூரியபிரகாசம் மனைவி பானுப்பிரியா, 31. இரு தினங்களுக்கு முன், தம்பதி இரவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, போதையில் இருந்த இரண்டு பேர் வீட்டில் கல் வீசினர்.
இது குறித்து தட்டிக்கேட்ட தம்பதியை, போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கியதுடன், வீட்டில் உள்ள பொருட்களை சாலையில் வீசி சேதப்படுத்தினர்.
பானுப்பிரியா அளித்த புகாரின்படி, கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த அருள்ஒளி, 24, ஆண்ட்ரூஸ், 25, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அருள்ஒளியை கைது செய்த போலீசார், தலைமறைவான ஆண்ட்ரூசை தேடுகின்றனர்.
