/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காயிலான் கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது
/
காயிலான் கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது
ADDED : மார் 24, 2025 03:10 AM

கோடம்பாக்கம்:கோடம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத், 45. இவர் கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில் காயிலான் கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம், புலியூர் 1வது பிரதான சாலை வழியாக சென்றார்.
அப்போது, அங்கு உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்த நபர் பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை தாக்கினார். பிரசாத் சத்தம் போடவே அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் ரோந்து போலீசார் அந்த நபரை பிடித்தனர். அந்த நபர் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றார்.
கோடம்பாக்கம் போலீசார், விசாரணை நடத்தி, கோடம்பாக்கம் முத்து தோட்டம் 2 வது தெருவை சேர்ந்த முகேஷ் கண்ணன், 25 என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் முகேஷ் கண்ணன் மீது ஏற்கனவே 2 கஞ்சா வழக்குகள்உட்பட 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.