ADDED : ஜன 25, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, நெருப்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் சலீம், 35. இவர் ஆதம்பாக்கம், காந்திநகரில் உள்ள கோழி கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த அக்பர் அலி, 33, என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 22ம் தேதி அக்பர் அலி, பேசுவதற்காக சலீமின் மொபைல் போனை கேட்டுள்ளார்.
அவர் தர மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அக்பர் அலி, கத்தியால் சலீமை வெட்டியுள்ளார்.
மருத்துவமனையில் சலீம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரை விசாரித்த ஆதம்பாக்கம் போலீசார், அக்பர் அலியை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்வின்படி சிறையில் அடைத்தனர்.