ADDED : மே 22, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், கொளத்துார், ஜவகர் நகரை சேர்ந்தவர் பிரதீப், 28; தனியர் நிறுவன ஊழியர். கடந்த 15ம் தேதி, அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் உள்ள கடைக்கு, பழச்சாறு குடிக்க சென்றார். கடை முன் நிறுத்தியிருந்த அவரது 'யமஹா' இருசக்கர வாகனம் திருடுபோனது.
அண்ணா நகர் போலீசார் விசாரணையில், அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த தனுஷ், 21, என்பவர், வாகனத்தை திருடியது தெரிந்தது.
அம்பத்துார், போரூர், திருமுல்லைவாயல் பகுதியில் வாகனங்கள் திருட்டில், தனுஷ் தொடர்ந்து ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.