/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது
/
பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது
ADDED : மே 27, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், எண்ணுார், ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, கமலாம்மாள் நகர், பகிங்ஹாம் கால்வாயோரம் மதுபோதையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த எண்ணுார் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹரி, 22, என்பவர், தனக்கு தரவேண்டிய 250 ரூபாய் பணத்தைக் கேட்டு, தகராறு செய்து, ஒரு கட்டத்தில், சதீஷ்குமாரின் வலது கை மோதிர விரலை கடித்து குதறியுள்ளார்.
காயமடைந்த சதீஷ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எண்ணுார் போலீசார், நேற்று மதியம் ஹரியை கைது செய்தனர்.