ADDED : டிச 09, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்,:வியாசர்பாடி, பி.வி. காலனியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 40. இவர், பெரம்பூர் -- மாதவரம் நெடுஞ்சாலையில், அரசு மதுபான கடையில், மதுக்கூடம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், மதுக்கூடத்துக்கு வந்த நபர் ஒருவர், பணம் தராமல், மது வாங்கி வரும் படி கூறியுள்ளார்.
அங்குள்ள ஊழியர்கள் பணம் கேட்டதற்கு, காலி பாட்டிலால் அடித்து கொன்று விடுவேன் என்று, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார், மதுக்கூடத்தில் தகராறு செய்த பெரம்பூரைச் சேர்ந்த பழைய குற்றவாளி அமர்நாத், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.