/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வாலிபர் கைது
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வாலிபர் கைது
ADDED : மார் 30, 2025 12:09 AM
ஆவடி,
ஆவடி அடுத்த பட்டாபிராம், பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா, 65; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி மல்லிகா, 48. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குளோரி என்பவர், வீடு கட்டி வருகிறார். இதனால், கருப்பையா வீட்டில் கல், மண், சிமென்ட் கலவை விழுவதாக, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி, வழக்கம் போல் பக்கத்து வீட்டில் ஊழியர்கள் வேலை செய்த போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த மல்லிகா, இது குறித்து கணவரிடம் தகவல் தெரிவித்தார். பின், மன உளைச்சலில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டாபிராம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
மேலும், தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த குளோரியின் உறவினர் சுரேஷ், 30, என்பவரை, போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள குளோரி, அவரது அண்ணன் மற்றும் அண்ணியை போலீசார் தேடி வருகின்றனர்.