ADDED : ஜன 19, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நர்சிங் கல்லுாரி படிக்கும் 16 வயது மாணவிக்கு, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 28, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்ததில், வெங்கடேசன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.