/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 26, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், தாம்பரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவருக்கு பழக்கமான குரோம்பேட்டையை சேர்ந்த செல்வம், 23, என்பவர் சென்றுள்ளார்.
அவரிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையறிந்த, சிறுமியின் பெற்றோர், செல்வம் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, ஜாதியை காரணம் காட்டி, கருவை கலைத்து விடுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், சேலையூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, செல்வத்தை நேற்று முன்தினம், போக்சோவில் கைது செய்தனர்.