/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபாலீஸ்வரர் கோவிலில் தீ வைத்த வாலிபர் கைது
/
கபாலீஸ்வரர் கோவிலில் தீ வைத்த வாலிபர் கைது
ADDED : பிப் 14, 2024 01:01 AM

மயிலாப்பூர், பிரசித்தி பெற்ற மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு மாட வீதி நுழைவுவாயில் முன், சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
கொழுந்துவிட்டெரிந்த தீயால் கோவில் அருகில் வசித்தவர்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்ட்ரலில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 'பைக்' திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், அனகாபுத்துார், சாந்தி நகர் 1வது தெருவைச் சேர்ந்த தீனதயாளன், 31, என்பது தெரிய வந்தது. இவர், கபாலீஸ்வரர் கோவில் முன் தீவைத்தவர் என்பதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், தீனதயாளன் இரவு வேளைகளில் கபாலீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் சில மணிநேரம் அமர்ந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று கொசுத்தொல்லை அதிகளவில் இருந்ததால், காகிதங்களை வைத்து தீ வைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

