/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் போன் பறிப்பு வாலிபர் கைது
/
முதியவரிடம் போன் பறிப்பு வாலிபர் கைது
ADDED : அக் 13, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை:முதியவரிடம் மொபைல் போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ், 74. சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், டீ குடிக்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் செல்வராஜ் மொபைல் போனை பறித்து தப்ப முயன்றார்.
அங்கிருந்த மக்கள், அந்த நபரை துரத்தி சென்று பிடித்து, சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், தி.நகரை சேர்ந்த சூர்யா, 26, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.