/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
/
பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர், போரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மொபைல் போன் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர் காரம்பாக்கம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் சவீத்தா ஸ்ரீ, 21. கடந்த 25 ம் தேதி போரூர் புத்தர் காலனி, 2 வது தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து கே.கே., நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சத்துரு, 19 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.