ADDED : பிப் 08, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சிவா, 30; ஆட்டோ ஓட்டுநர். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஓராண்டாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிள்ளைகளுடன் அதே பகுதியில் தனியாக வாழ்கிறார்.
நேற்று முன்தினம், பிள்ளைகளை பார்க்க சென்ற சிவா, மனைவியின் வீட்டில் இருந்து சூர்யா, 22, என்ற நபர் வெளியே வந்ததை கண்டு, விசாரித்துள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அதில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, சிவா வயிற்றில் சூர்யா குத்தினார். இதில், சிவா பலத்த காயமடைந்தார். செம்மஞ்சேரி போலீசார் நேற்று, சூர்யாவை கைது செய்தனர்.
