ADDED : பிப் 17, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர்: திருவேற்காடைச் சேர்ந்தவர் ஏழுமலை, 50; கொத்தனார். இவர், முகப்பேர் மேற்கு, பஜனை கோவில் தெருவில், கட்டுமான பணி நடக்கும் வீட்டின் முன், தன் 'யமஹா' பைக்கை, நேற்று முன்தினம் காலை நிறுத்தி சென்றார்.
பணி முடிந்து, மாலை வந்து பார்த்தபோது, பைக் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து, நொளம்பூர் போலீசில், புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்டது, விருகம்பாக்கம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன், 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.