ADDED : ஜூலை 02, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோட்டூர்புரத்தில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தரமணி பள்ளிப்பட்டை சேர்ந்தவர் கார்த்திக், 42. அவர், பால் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 26ம் தேதியன்று இரவு, அவரது முதலாளியின் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்து இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, திருடுபோனது தெரியவந்தது.
கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து, பைக் திருடிய கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண், 25 என்பவரை கைது செய்தனர். திருடு போன பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.