/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டியபடி வீடுகளில் திருடிய வாலிபர் கைது
/
'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டியபடி வீடுகளில் திருடிய வாலிபர் கைது
'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டியபடி வீடுகளில் திருடிய வாலிபர் கைது
'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டியபடி வீடுகளில் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 10, 2025 12:25 AM

திருவொற்றியூர்,
திருவொற்றியூர், வடக்கு பேட்டை கிராமத் தெருவைச் சேர்ந்தவர் பிரமிளா. கடந்தாண்டு ஜனவரி, இவரது வீட்டில் 3.50 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது.
திருவொற்றியூர், அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த ஐ.சி.எப்., நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியான ஹரிதாஸ், 74, என்பவர் வீட்டில், கடந்தாண்டு ஜன., 31ம் தேதி, 3 சவரன் தங்க நகைகள், 85,000 ரூபாய் உள்ளிட்டவை திருடு போயிருந்தன.
இவ்விரு சம்பவங்கள் குறித்து, திருவொற்றியூர் போலீசார் இவரை தேடி வந்த நிலையில், மற்றொரு வழக்கு ஒன்றில், மதுரவாயல் காவல் நிலையத்தில் சிக்கியிருந்த, அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, என்பவரின் கைரேகையும், திருவொற்றியூரில் தொடர் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகையும் ஒத்துபோனது. இதையடுத்து, இந்த வழக்குகள் தொடர்பாக, நேற்று முன்தினம் மதுரவாயலில் வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.
விசாரணையில், டிப்ளமா படித்துள்ள கார்த்திக், ரேபிடோ பைக் ஓட்டி வந்துள்ளார். அப்போது, பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, மறைத்து வைத்திருக்கும் சாவியை எடுத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். விசாரணைக்கு பின், நேற்று போலீசார் கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.