ADDED : ஏப் 22, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரவள்ளூர், பெரவள்ளூர், ஜி.கே.எம்., காலனி, கட்டபொம்மன் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 36. திருவள்ளூரில் வசித்து வந்த இவர், அங்குள்ள வீட்டை காலி செய்ய, ‛நோ புரோக்கர்' ஆன்லைன் செயலியில் பதிவு செய்தார்.
அதன் பேரில் வந்த ஐவர், வீட்டை காலி செய்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி, பெரவள்ளூரில் உள்ள வீட்டில் இறக்கி வைத்தனர்.
அதன்பின், காரில் பையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, 5 சவரன் எடை கொண்ட, மூன்று தங்கச்சங்கிலியை காணவில்லை.
இதுகுறித்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். விசாரணையில், நகைகளை திருடிய கார்த்திக், 26, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 சவரன் எடை கொண்ட, மூன்று தங்கச்சங்கிலிகள் மீட்கப்பட்டன.