/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லேப்டாப், மொபைல்போன் திருடிய வாலிபர் கைது
/
லேப்டாப், மொபைல்போன் திருடிய வாலிபர் கைது
ADDED : செப் 03, 2025 12:28 AM
சென்னை, சென்ட்ரலில் பெண் பயணியின் லேப்டாப், மொபைல் போனை திருடிய வாலிபரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த பெண் பயணி, கடந்த 30ம் தேதி, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறையில், விலை உயர்ந்த மொபைல் போன், லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா காட்சியை பார்த்து, திருடியவரை அடையாளம் கண்ட ரயில்வே போலீசார், அவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே, கொருக்குப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த மகேஷ்பாபு, 21, என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவரை ரயில்வே போலீசார் கைது செய்து, லேப்டாப், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.