/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படப்பையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
/
படப்பையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
படப்பையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
படப்பையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
ADDED : பிப் 05, 2025 12:28 AM

படப்பை,திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 25. இவர், படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
படப்பையில் இவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை, குளியல் அறையின் ஜன்னலில் இருந்து, வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்து, அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, அந்த இளைஞரை பிடித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் அப்பகுதிவாசிகள் ஒப்படைத்தனர்.
அந்த இளைஞனின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் நான்கு பெண்கள், வெவ்வேறு இடங்களில், வீட்டின் குளியல் அறையில் குளிக்கும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் புகாரின்படி, போலீசார் சரவணனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.