ADDED : ஏப் 25, 2026 09:15 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி: இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த வடமாநில வாலிபரை, பகுதிமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர், நேற்று வீட்டின் குளியலறையில் குளித்த கொண்டிருந்த போது, மர்ம நபர் மாடி வழியாக எட்டி பார்த்துள்ளார்.
இதை பார்த்து அப்பெண் அலற, அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், மெட்ரோ வழித்தட கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தை தேசர்ந்த பொக்லைன் ஆப்பரேட்டரான அன்சாரி, 25 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
