கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ADDED : ஜன 06, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ராஜமங்கலம்: வில்லிவாக்கம், பாலாம்பிகை நகரில், கோபால கிருஷ்ணன், 55, என்பவருக்கு சொந்தமான கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு, செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 30, என்பவர் பணியாற்றி வந்தார்.
கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சாரம் அமைக்கும் பணியின்போது, அருகில் இருந்த மின் கம்பியில் ஸ்டீபன்ராஜின் கை உரசியது. இதில், மின்சாரம் தாக்கி அவர் துாக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த ஸ்டீபன்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தது தெரிந்தது. ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
