/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுங்கத்துறை ஊழியரின் கார் மோதி வாலிபர் பலி
/
சுங்கத்துறை ஊழியரின் கார் மோதி வாலிபர் பலி
ADDED : ஜூலை 22, 2025 12:37 AM
மதுரவாயல், மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுங்கத்துறை ஊழியரின் கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
டில்லியைச் சேர்ந்தவர் சுகைல், 39. இவர், மதுரவாயல் அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் தங்கி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் பணிபுரிகிறார். நேற்று காலை, வேலைக்கு செல்வதற்காக, தன் சொந்த காரில் புறப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், போரூர் அருகே சென்றபோது, சாலையை கடந்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்த அருண், 31, என்பவர் மீது கார் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆவடி போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பினர். போரூர் ஏரியில் மீன் பிடித்து விட்டு சாலையை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கி பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து சுங்கத்துறை ஊழியரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.